பரமக்குடி: பா.ஜ., மாநில இளைஞரணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அனைத்து பகுதிகளிலும் வெற்றி வேல், வீரவேல் முழங்கும் வகையில் ஸ்டிக்கர்களை ஒட்டினர். முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தும் வகையில் கருப்பர் கூட்டத்தினர் செயல்பட்டனர்.அவர்களுக்கு எதிராகபா.ஜ., மாநில இளை ஞரணி சார்பில், செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட துணைத்தலைவர் முத்துலிங்கம், முத்து சரவணன் உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் வீடுகள், கடைகள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வெற்றிவேல் வீரவேல் மந்திரம், முருகன் வேல் படங்களை ஒட்டினர்.