கொட்டாம்பட்டி, எல்லா வளமும் கிடைக்க வேண்டி வீரசூடாமணிபட்டியில் ஆடு, சேவல் படையலிட்டு ஆண்கள் மட்டும் பங்கேற்ற வழிபாடு நடந்தது.இங்குள்ள ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடந்தது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் கிராமத்து சார்பில் 3 ஆடுகள், 11 சேவல்களை காணிக்கையாக கொடுத்தனர். அதை மண்பானையிலிட்டு அதன் மேல் வேப்பிலையை போட்டு அவித்து அம்மனுக்கு படையல் இட்டனர். வேப்பிலை போட்டு சமைத்தாலும் அம்மனுக்கு படையல் இடுவதால் கசக்காது.