பதிவு செய்த நாள்
06
ஆக
2020
01:08
அயோத்தியில், ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, காலை, 11:30 முதல் 12:30 மணி வரை, வீடுகள் தோறும் விளக்கேற்றவும், ஸ்ரீ ராம் ஜெயராம்; ஜெய ஜெய ஜெயராம் என 108 முறை பாராயணம் செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டது. உடுமலையில், ஏரிப்பாளையத்தில், 80க்கும் மேற்பட்ட வீடுகளிலும், ஐஸ்வர்யா நகர், சிவசக்தி காலனி, ராமசாமி நகர், கொழுமம், குடிமங்கலம், சோமவாரபட்டி, மடத்துக்குளம் என பல்வேறு பகுதிகளில், ஆயிரக்கணக்கான வீடுகளில், விளக்கேற்றி வழிபாடு நடந்தது.இந்து முன்னணி சார்பில், பழனி ரோடு, பஸ் ஸ்டாண்ட், சந்தை உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில், இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இதில், மாவட்டச்செயலாளர் வீரப்பன், பூரணச்சந்திரன், பபீஸ், சரவணன், முருகேசன், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பொள்ளாச்சிபொள்ளாச்சி கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், சங்கர மடம் அருகே அண்ணாமலை ஈஸ்வரர் கோவிலில் ராமநாம ஜெபம் நடந்தது. பேரவையின் பொள்ளாச்சி நகர அமைப்பாளர் கோவிந்தஜி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.ராம பிரான் படத்துக்கு மாலை அணிவித்து பூஜை நடந்தது. சமூக இடைவெளி விட்டு, காலை, 11:30 முதல், 12:30 மணி வரை ராம நாம ஜெபத்தை உச்சரித்து வழிபாடு செய்தனர்.* ஆனைமலை முக்கோணத்தில் விஸ்வ ஹிந்து பரிஷித், பா.ஜ., சார்பில், ராமரின் திருவுருவ படத்துக்கு பூஜை செய்தனர். மக்களுக்கு இனிப்புகள் வழங்கியதுடன், 108 முறை ராமநாம ஜெபம் செய்தனர். வீடுகளில் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்.* வால்பாறையில், பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல், மண்டல தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர். - நிருபர் குழு -