அயோத்தியில் திருப்பணி: நீலமங்கலம் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2020 01:08
கள்ளக்குறிச்சி : அயோத்தி ராமர் கோவில் திருப்பணி துவக்கத்திற்காக நீலமங்கலம் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை பிரதமர் மோடி துவக்கி வைத்து நேற்று அடிக்கல் நாட்டினார். ராமர் கோவில் கட்டும் பணி சிறப்புடன் அமைய வேண்டி நுாற்றாண்டைக் கடந்து பெருமை பெற்ற கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கோதண்டராமர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.சீதை, லட்சுமணர், ராமர், ஆஞ்சநேயர், மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரம் செய்த பின், விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிக்கப்பட்டு ராம மந்திர ஜெபம் நடந்தது.பூஜைகளை சிவசுப்ரமணியன் செய்தார். பக்தர்கள் அனுமதியின்றி பூஜை நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை நீலமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.