பதிவு செய்த நாள்
06
ஆக
2020
01:08
ராமநாதபுரம்: அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் நகர் பா.ஜ., சார்பில் சிவன் கோயில் வளாகத்தில் அமைந்துஉள்ள கோதண்ட ராமர் கோயிலில் நகர் தலைவர் வீரபாகு தலைமையில் 108 தேங்காய் உடைத்து பூஜை செய்யப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் குமார், நகர் நிர்வாகிகள் பிரபாகரி, முத்துச்சாமி, மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.* விழா சிறப்புடன் நடைபெற வேண்டி மாவட்ட ஊடக பிரிவு தலைவர் குமரன் இல்லத்தில் குடும்பத்தினருடன் விளக்கேற்றி ராமபிரான் படத்திற்கு பூஜை செய்தனர். இதே போல் வீடுகளில் காலை 11:30 முதல் மதியம் 12:30 வரை விளக்கேற்றி வழிபட்டனர்.
திருவாடானை: அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு திருவாடானை அருகே நெய்வயலில் பா.ஜ., மாவட்ட இளைஞர் அணி துணைதலைவர் சித்திரவேல் தலைமையிலும், திருவெற்றியூர் இந்து மக்கள் நல இயக்க தலைவர் இளையராஜா தலைமையில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.தொண்டி: தொண்டியில் இந்து ஜனநாயக பேரவை சார்பில் மாநில தலைவர் அண்ணாத்துரை தலைமையில் கொண்டாடப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் நகர் பா.ஜ., சார்பில் நகர் தலைவர் பாண்டித்துரை தலைமையில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். துணைத் தலைவர் ரவி, செயலாளர் சசிக்குமார், இளைஞரணி செயலாளர் கிேஷார், செல்லத்துரை, முருகன், கைலாஸ், ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கமுதி: கமுதியில் பா.ஜ., ஒன்றிய தலைவர் முருகன் தலைமையிலும், மாவட்ட விவசாய தலைவர் கணபதி முன்னிலையிலும், ராமர் படத்திற்கு மாலைஅணிவித்து கொண் டாடினர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.