பட்டாபிராம்; ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, ஹிந்து அமைப்பினர், 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.இதை முன்னிட்டு, பட்டாபிராமில் உள்ள தேவி நாகவல்லி அம்மன் கோவில், விவேகா ஹிந்து இயக்கம் அமைப்பினர், அன்னதானம் வழங்கினர். இதில், பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றனர்.