பதிவு செய்த நாள்
06
ஆக
2020
04:08
பதஞ்சலி யோகா பீடம் சார்பில், அயோத்தியில் குருகுலம் அமைக்கப்படும் என, யோகா குரு, பாபா ராம்தேவ் கூறினார்.
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில், யோகா குரு பாபா ராம் தேவ் கூறியதாவது:ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா, நாட்டின் மிகச்சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்று. இந்த வரலாற்று பெருமை வாய்ந்த நிகழ்ச்சிக்கு, நாடு சாட்சியாக உள்ளது. இந்த நாளை, வருங்கால தலைமுறையினர், பெருமையுடன் கொண்டாட வேண்டும். ராமர் கோவில் கட்டப்படுவதால், நாட்டில் ராம ராஜ்யம் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அதற்கு உதவும் வகையில், அயோத்தியில், பதஞ்சலி யோகா பீடம் சார்பில், மிகப்பெரிய குருகுலம் நிறுவப்படும். இந்த குருகுலத்தில், உலகம் முழுதும் இருந்து வருவோர், வேதங்கள் மற்றும் ஆயுர்வேதம் ஆகியவற்றை படிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.