விழுப்புரம் : குருபெயர்ச்சியை முன்னிட்டு கோலியனூர் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நாளை 17ம் தேதி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜை நடக்கிறது. விழுப்புரம் அடுத்த கோலியனூர் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நவக்கிரகங்கள் சன்னதி இல்லை. சனீஸ்வரர் மற்றும் குரு பகவான் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். சப்தமாதர்கள் பூஜிக்கின்ற நிலையில் குருபகவான் தனி சன்னதியில் உள்ளார். இக்கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு நாளை 17ம் தேதி காலை 9 மணியளவில் குருபெயர்ச்சி ஹோமம், மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஊர் பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.