பதிவு செய்த நாள்
08
ஆக
2020
12:08
சென்னை, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில், விதவிதமான கிருஷ்ணர் பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.கைவினைப் பொருட்களின் தரம், விற்பனையில், தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனத்திற்கு, தனி இடம் உண்டு.ஆண்டுதோறும், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பொம்மை கண்காட்சியை, பூம்புகார் நடத்துகிறது. இந்தாண்டு, ஊரடங்கு காரணமாக, கண்காட்சி நடத்தப்படவில்லை.அதேநேரம், கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட, விதவிதமான கிருஷ்ணர் பொம்மைகள், சென்னை, அண்ணா சாலையில் உள்ள, பூம்புகார் விற்பனையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுஉள்ளன.இதில், பஞ்சலோகம், பித்தளை, களிமண், காகிதக்கூழ், பளிங்குத்துாள், மரம், கருங்கல், சுட்டமண் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட, கிருஷ்ணர் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.குறைந்தபட்சம், 250 ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, 10 சதகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு களைகட்டுது பூம்புகார் விற்பனைவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.