ஸ்ரீவில்லிபுத்துார்; வீடுகள் தோறும் இன்று வாசலில் வேல் வரைந்து, கந்த சஷ்டி பாடி ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள் என ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது செய்திகுறிப்பு: கடவுள் முருகப்பெருமானின் புனித கவசமான கந்த சஷ்டி கவசத்தை கயவர்கள் இழிவுபடுத்தியது மிகுந்த அதிர்ச்சிக்குரியது. அவர்களை அரசு கைது செய்திருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. மடாதிபதிகள், துறவியர்கள், ஆதினங்கள் வேண்டுகோள்படி இன்று காலை ஒவ்வொருவரின் வீட்டின் வாசலில் வேல்வரைந்தும், மாலையில் வீட்டில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை பாடி நமது ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும். இதன்மூலம் இனிமேல் எவரும் நம் கடவுள்களை இழிவுபடுத்தாத நிலையை ஏற்படுத்தவேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.