உளுந்தூர்பேட்டை: பாதூர் ரேணுகா அம்பிகை கோவிலில் ஆடி நான்காவது வெள்ளி கிழமையொட்டி பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ ரேணுகா அம்பிகை கோவிலில் ஆடி நான்காவது வெள்ளி கிழமையொட்டி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சந்தனம், பன்னீர், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த சிறப்பு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.