தேனி: கிருஷ்ணஜெயந்தியையொட்டி தேனி பழனிசெட்டிபட்டி கோபால கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பாண்டு ரங்க பெருமாள் அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். தேனி வேல்முருகன் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது.போடி -: திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடந்தது. சமூக இடைவெளியில் பக்தர்கள் தரிசித்தனர். கிருஷ்ணர், ராதை போல சிறந்த வேடம் அணிந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரியகுளம்: தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம், தென்கரை, வடகரை பகுதிகள் மற்றும் வடுகபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினர்.சிறுவர்கள், சிறுமிகள் ராதை, கிருஷ்ணர் வேடமணிந்திருந்தனர்.