பதிவு செய்த நாள்
12
ஆக
2020
03:08
உடுமலை: உடுமலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உடுமலை பெரியகடை வீதி, சீனிவாச பெருமாள் கோவிலில், எம்பெருமாளுக்கு, பால், தயிர், நெய், வெண்ணெய், இளநீர், தேன், பழச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில், சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், குழந்தை வடிவில், ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன், சிறப்பு அலங்காரத்தில், நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே போல், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பெருமாள் கோவில்களில், சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடந்தன. வீடுகளில் குழந்தைகளுக்கு, கிருஷ்ணர், ராதை வேடமிட்டு, வழிபட்டனர்.* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, பால், தயிர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிேஷகம் நடந்தது.ரோஜா, துளசி, அரளி, சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட, ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜை நடந்தது. அவுல், கரும்பு சர்க்கரை பிரசாதம் பெருமாளுக்கு படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.