திருவாடானை: திருவாடானை அருகே கிருஷ்ண ஜெயந்தியைமுன்னிட்டு புலியூர் கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மலர் மாலைகளால் கிருஷ்ணர்-ருக்மணி அலங்கரிக்கபட்டிருந்தனர்.கிருஷ்ணருக்கு பிடித்த உணவு படைக்கபட்டு தீபாராதனை நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் யாதவ வர்த்தகசங்கம் சார்பில் புல்லமடை சாலையில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்,சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். வர்த்தக சங்க தலைவர்செல்வகுமார், செயலாளர்பொய்யாமொழி, பொருளாளர் பிரபு, ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், ஆலோசகர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும்ராதை வேடமிட்டு மகிழ்ந்தனர். .கீழக்கரை: கீழக்கரை அருகே கோகுலம் நகரில்கோகுலாஷ்டமியை முன்னிட்டு மூலவர்கள் பாமா, ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணனுக்கு 18 வகை அபிஷேக ஆராதனை நிறைவேற்றப் பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தரிசனம் செய்தனர். உலக நன்மைக்கான கூட்டுவழிபாடும்,கொரோனா தாக்கத்தில் இருந்து உலக மக்கள் மீண்டு வரக்கோரி சிறப்பு யாக வேள்வி நடந்தது.