தேவகோட்டை:தேவகோட்டை யாதவா நர்சரி பள்ளியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு யாதவா சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள்,இளைஞர் அணியினர், பள்ளி ஆசிரியைகள் பள்ளி வளாகத்தில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர்.நகர விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நகர தலைவர் சுரேஷ், மாநில சேவா பிரிவு அமைப்பாளர் கருப்பண்ணன் முன்னிலையில் மாநில செயலாளர் சத்தியமூர்த்தி கிருஷ்ணர் படத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.