கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை விநாயகர், வள்ளி தெய்வானை பாலசுப்ரமணியர், சிவகாமி சிதம்பரேஸ்வரர், சண்டிகேஸ்வரர், பஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலையில் விக்னேஷ்வரர் பூஜை, புன்னியாவஜனம் பூஜைகளுக்கு பின் கால பைரவருக்கு கும்ப கலசம் வைத்து ஆவாகணம் செய்தனர். அதனைத் தொடர்ந்து யாகங்கள் நடந்தது. கால பைரவருக்குரிய மூலமந்திரங்களை வாசித்து அதன் பின் மகா பூர்ணாகுகதி யாகத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. சுவாமிக்கு வடமாலை, அரளி மாலை சாற்றி உலக நன்மை வேண்டி பூஜை நடத்தப்பட்டது.