பதிவு செய்த நாள்
14
ஆக
2020
11:08
லக்னோ; உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலை கட்டுவதற்கான அறக்கட்டளையின் தலைவர், மகந்த் நிருத்ய கோபால் தாஸ், 82, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த, ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், இவரும் பங்கேற்றார்.அயோத்தியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில், சமீபத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச கவர்னர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் மற்றும் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தலைவர், மகந்த் நிருத்ய கோபால் தாஸ் பங்கேற்றனர்.இவர்கள் மட்டுமே விழா மேடையில் இருந்தனர்.இந்நிலையில், மதுராவுக்கு சென்றுள்ள, மகந்த் நிருத்ய கோபால் தாசுக்கு உடல்நிலை சரியில்லாததால், பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அனைத்து கோயில்களை திறக்க வலியுறுத்தல் மதுரை, மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கூட்டம் மாநில அமைப்பாளர் சுடலைமணி தலைமையில் நடந்தது.மாவட்ட தலைவர் கிருஷ்ணா, செயலாளர் பத்மநாபன் நாராயணயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து பெரிய கோயில்களையும் திறக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்திற்குள்ளான வசந்தராயர் மண்டபத்தை தாமதமின்றி தொன்மை மாறாமல் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.