பழநி:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக அரசு ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ள நிலையில் பழநியில் விநாயகர் சிலைகள் தயாராக உள்ளன.ஆக.,22ல் வரும் சதுர்த்தி விழாவுக்காக பழநியில் ஹிந்து முன்னணி சார்பில் 150க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்கு வர்ணம் பூசும் பணிகள் துவங்க உள்ளது.இவற்றை பொதுமக்கள்வீடுகளில் வைத்து பூஜை செய்து, பின்பு ஆற்றில் கரைக்க உள்ளதாக தெரிவித்தனர். வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் சதுர்த்தி வழிபாட்டுக்காக விநாயகர் சிலைகள் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளன. விநாயகர் சதுர்த்தி நாளில் பொதுஇடங்களில் வைக்க ஹிந்து முன்னணி சார்பில் 300 விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.ஊர்வலத்திற்கு தடை உள்ளதால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. டி.எஸ்.பி., முருகன் கூறுகையில், அரசு முடிவு என்னவோ அதன்படி தான் நடக்க வேண்டும் என்றார்.