மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீவாரி வேங்கடேசப் பெருமாள் கோவிலில், கோகுலாஷ்டமி முன்னிட்டு, கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கோவிலில் நேற்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நவநீத கிருஷ்ணர் அலங்காரத்தில், சுவாமி திருவீதி உலா வந்து எழுந்தருளினார். யமுனை துறையில் விசேஷ ஆர்த்திக்கு பின்பு, உறியடி உற்சவமும், வழுக்கு மரம் ஏறும் வைபவமும், மாலை பூஜைகளும் நடந்தன. கோவில் ஊழியர்கள் மட்டும் விழாவை நடத்தினர். இவ்விழாவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.