Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை ... சூலூர் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜை சூலூர் அம்மன் கோவில்களில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
02:08

தஞ்சாவூர், தஞ்சாவூர் புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடி மரத்துக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது.

மேலும், உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் ச. கிருஷ்ணன், பெரியகோயில் செயல் அலுவலர் எஸ். மாதவன், மாரியம்மன் கோயில் மேற்பார்வையாளர் செந்தில்குமார், தலைமைக் கணக்கர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான ஆக. 23ம் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான ஆக. 30ம் தேதி அன்ன வாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது. மூன்றாம் வார ஞாயிற்றுக்கிழமையான செப். 6ம் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு, செப். 7ம் தேதி பெரிய காப்பு, படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, தொடர்ந்து 8 நாள்களுக்கு அம்மன் புறப்பாடு நடைபெறும். இந்தப் புறப்பாடுகள் அனைத்தும் கோயிலுக்குள் நடைபெறும் என்றும், கடந்த ஆண்டுகளைப் போன்று வெளியில் புறப்பாடு இல்லை எனவும், கரோனா பரவல் அச்சம் காரணமாகக் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், திருத்தேரோட்டம், தெப்பத் திருவிழா நடைபெற வாய்ப்பில்லை என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar