கரூர்: கரூர் தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமணியர் கோவிலில், ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது. அதில், மூலவருக்கு பால், சந்தனம், பன்னீர், மஞ்சள், கரும்பு சாறு, பழவகைகள், இளநீர், விபூதி உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபி ?ஷகம்; பிறகு, சிறப்பு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சஷ்டி குழு தலைவர் மேலை பழனியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.