மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள சித்தர் சன்னதி புகழ்பெற்றது. இவரது பெயர் சுந்தரானந்தர். புதன் தலமாக மதுரை விளங்குவதால், சித்தரை புதன் கிழமையில் வழிபட்டால் கல்வி மேம்பாடு உண்டாகும். விருப்பம் நிறைவேற பக்தர்கள் சித்தருக்கு பூக்கூடாரம் இடுவதை நேர்த்திக்கடனாகச் செய்கின்றனர். சிவபெருமானே சித்தராக எழுந்தருளி கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் நிகழ்த்தியாக புராணம் கூறுகிறது. இவருக்கு ‘எல்லாம் வல்ல சித்தர்’ என்றும் பெயருண்டு. இவரது சன்னதி அருகில் கல்யானை உள்ளது.