முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கொடிக்கம்பம் உள்ள பகுதியில், தகர சீட் கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேற்கூரை சேதமடைந்ததால், புதியதாக, வசந்த மண்டபம் கட்ட திட்டமிட்டு, உபயதாரர் மூலம் 1.60 கோடி ரூபாய் மதிப்பில், கடந்தாண்டு, வசந்த மண்டபம் கட்டும் பணி துவங்கியது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், இதன் திறப்பு விழா இன்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து, முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் புதியதாக கட்டப்பட்ட வசந்த மண்டபத்தை திறந்து வைத்தார். கோவிலில் நடந்த விழாவில், மருதமலை கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிசெல்வன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.