கருமத்தம்பட்டி: சதுர்த்தி விழாவை ஒட்டி, குட்டி, குட்டி விநாயகர் சிலைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால், வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் குட்டி, குட்டியாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளன. கருமத்தம்பட்டி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய விநாயகர் சிலைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் இந்து இயக்கத்தினர் சிலைகளை வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சிலைகளை விற்க போலீசார் கெடுபிடி காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பொது இடங்களில் வைக்கத்தான் அரசு தடை விதித்துள்ளது. கோவில்களில், வீடுகளில் வைத்து தடை இல்லை என, இந்து இயக்கத்தினர் கூறினர்.