குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் இடுவது, சிதறுகாய் உடைப்பது, எருக்கம்பூ மாலைஅணிவது, அருகம்புல்லால் அர்ச்சிப்பது, கொழுக்கட்டை படைப்பது அனைத்தும் விநாயகருக்கு உகந்த வழிபாடுகள். ஆனால், இதையெல்லாம் விட மிக எளிய வழிபாடு விநாயகரை வலம் வருவதாகும். அவரே இதற்கு உதாரணமாக நடந்து பலன் பெற்றார். அம்மையப்பரே உலகம்! உலகமே அம்மையப்பர்! என்று சொல்லி பெற்றோரை வலம் வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். குறைந்தபட்சம் மூன்றுமுறை விநாயகரை வலம் வரவேண்டும். 21முறை, 108முறை விநாயக மந்திரமாகிய ஓம் சக்தி விநாயக நம என்று ஜெபித்தபடி வலம் வந்தால் தேகபலம், புத்திபலம், பணபலம் என்று வாழ்விற்குத் தேவையான எல்லா பலங்களையும் பெற்று வாழலாம்.