திருச்சி: திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில் மெகா சைஸ் கொல்கட்டை படைக்கப்படாமல் தினசரி பூஜை நடத்தப்பட்டு, பழங்களால் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.