காரமடை: அரங்கநாதர் கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க தேர் அமைப்பதற்கான துவக்க விழா எளிமையாக நடைப்பெற்றது. கொங்கு மண்டலத்தின் பிரசித்திபெற்ற வைனவ திருத்தளமானது 1500 ஆண்டுகள் பழமையான ஆலயமாகும். இந்த திருக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமகா திருத்தேரோட்டம் விமர்சையாக கொண்டாடபட்டு வரும் நிலையில் கோவிலுக்கு உபய தாரர்கள் மூலம் தங்கத்தேர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைப்பெற்றது. பரிவேட்டை மைதானத்தில் நடைப்பெற்ற துவக்க நிகழ்ச்சியில் கோவில் ஸ்தலத்தார் உபயதாரர்கள் குடும்பத்தார் முன்னிலையில் வேதவிற்பனர்கள் மூலம் சிறப்பு வேள்விகள் நடத்தபட்டு அரங்கநாதபெருமாளுக்கு தங்கதேர் அமைக்க சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது.
இதனையடுத்து திருத்தேர் அமைப்பதற்காக கொண்டுவரபட்ட மரங்களுக்கு பூஜைகள் செய்து பணிகள் துவங்கபட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னராஜ், அருண்குமார் முன்னாள் எம்.பி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பணியினை துவக்கி வைத்தனர். பல கோடி ரூபாய் மதிப்பில் அரங்கநாதர் கோவிலில் முதன் முதலாக செய்யப்பட உள்ள தங்க தேரானது முழுக்க முழுக்க உபயதாரர்கள் ண்கொடையை மட்டுமே கொண்டு அமைக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் தங்கதேரானை அளிக்க உள்ள எம்.எம் ரமசாசமி உபயதாரர் குடும்பத்தார் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்துகொண்டு எளிமையாக நடைப்பெற்றது.