பதிவு செய்த நாள்
23
ஆக
2020
12:08
திருப்பதி லட்டும், பழனி பஞ்சாமிர்தமும் சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது. குறைந்தபட்சம் உள்ளூர் கோவில்களில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கலையாவது சாப்பிட்டிருப்போம்.விநாயகருக்கு கொழுக்கட்டை, ஆஞ்சநேயருக்கு வடை, சில கோவில்களில் வழங்கப்படும் புளியோதரை...மறக்கவே முடியாது போங்கள் இதன் சுவையை!இவை, வெறும் பூஜை பொருட்களாக மட்டும் வழங்கப்படுவதில்லை. அதற்கு பின்னால் மகத்தான மருத்துவ ரகசியங்கள் மறைந்திருப்பது தெரியுமா!ஆன்மிகத்தில் ஈடுபடு உள்ளவர்களுக்கு தெரியும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்பே இல்லை.
இதோ...தெரிந்து கொள்ளுங்கள் என விளக்குகிறார், சூலுார் ஒன்றியம் குழந்தை வளர்ச்சி திட்ட ஊட்டச்சத்து நிபுணர் சம்ருத்தா... கோயில் பிரசாதத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த, நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன.பழனி முருகன் கோவில் பிரசாதத்துக்கு, பஞ்சாமிர்தம் என்று ஏன் பெயர் வந்தது என்றால், அது அமிர்தத்துக்கு இணையானது என்ற பொருளில்தான். பஞ்சாமிருதத்தில் சேர்க்கப்படும் நாட்டு சர்க்ககரை, மலை வாழைப்பழம், பேரிச்சை, ஏலக்காய், பனங்கற்கண்டு, தேன் உள்ளிட்ட அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இயற்கையான பொருட்கள். இவை எல்லாம் கலந்து, மருந்தை போல் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.மக்கள் அதிகம் கூடும் கோவில்களில், எளிதில் நோய் கிருமிக்கள் தொற்றும் வாய்ப்புகள் உள்ளன. இதில் இருந்து தற்காத்து கொள்ளவே, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இந்த பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.திருப்பதி லட்டில் நோய் எதிர்ப்பு சக்தி!திருப்பதி லட்டில் பிரதானமாக நெய், முத்திரி உலர் திராட்சை, ஏலக்காய், கற்கண்டு சேர்க்கப்படுகிறது. இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு கொண்ட புரத சத்துக்களாகும். பெரும்பாலான கோவில்களில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கல் முந்திரி பருப்பு, நெய், ஏலக்காய் சேர்க்கப்படுகிறது. வெண் பொங்கலிலும், மிளகு, சீரகம், நெய், கடுகு, இஞ்சி, முந்திரி போன்ற பொருட்கள் சேர்த்து சமைக்கப்படுகின்றன. இவையனைத்தும், கொரோனா தொற்றுக்கு தடா போடும் மருந்துகள்.பத்து மிளகு இருந்தால், பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்ற பழமொழி சும்மா வரவில்லை. மிளகு அந்த அளவுக்கு, பவர்புல் மெடிசின். இப்படி அனைத்து கோவில் பிரசாதங்களிலும், நோய் எதிர்ப்பும், மருத்துவ குணமும் உள்ளன. இதை கடவுளுக்கு படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும்போது, அதன் மகிமை இன்னும் அதிகமாகி விடுகிறது.- இவ்வாறு விளக்கி, கேட்பவர்களை அட...ஆமா இல்லை... என வாய் பிளக்க வைக்கிறார் டாக்டர் சம்ருத்தா!பெரும்பாலான கோவில்களில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கல் முந்திரி பருப்பு, நெய், ஏலக்காய் சேர்க்கப்படுகிறது. வெண் பொங்கலிலும், மிளகு, சீரகம், நெய், கடுகு, இஞ்சி, முந்திரி போன்ற பொருட்கள் சேர்த்து சமைக்கப்படுகின்றன. இவையனைத்தும், கொரோனா தொற்றுக்கு தடா போடும் மருந்துகள்.