பதிவு செய்த நாள்
26
ஆக
2020
03:08
ஓசூர்; சாலையை கடக்க முயன்ற குரங்கு, வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்தது. இறுதி சடங்கு செய்து, பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கோபசந்திரம் அருகே, ஆண் குரங்கு, நேற்று மதியம் சாலையை கடக்க முயற்சித்தது. அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், குரங்கு மீது மோதியது.இதில் படுகாயமடைந்து, குரங்கு உயிரிழந்தது. பொது மக்கள், வனத்துறை அனுமதியுடன், தேசிய நெடுஞ்சாலையோரம் குழி தோண்டி, குரங்கை அடக்கம் செய்தனர். சந்தனம், குங்குமம், ஊதுபத்தி, தேங்காய், பழம், பூ வைத்து, குரங்கிற்கு இறுதி சடங்கு செய்தனர்.