கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2020 04:09
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. அதனையொட்டி, சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தன. நடராஜர் மண்டபத்தில் ராகு, கேதுவிற்கு கலசங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜைக்குப்பின் கும்ப கலசங்களில் மூல மந்திரங்களை வாசித்து, ராகு கேது பகவானை ஆவாஹனம் செய்து, வேத சிவாகம முறைப்படி தத்துவார்ச்சனை, மூல மந்திர ஜெபம் நடத்தினர்.அதனைத் தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டது.
மகா பூர்ணாகுதிக்குப்பின், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ராகு, கேதுவிற்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.கொரோனா துன்பத்திலிருந்து உலக மக்களைக் காப்பாற்றக்கோரி வழிபாடு செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை அம்பிகேஸ்வரன் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.இதேபோன்று கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி வழிபாடு நடந்தது.