மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2020 04:09
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று வெகு விமர்சையாக நட ந்தது. புதுச்சேரி – திண்டிவனம் சாலையில், மொரட்டாண்டி டோல்கேட் அருகே, விஸ்வரூப மகா சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 12 அடி உயர ராகு, கேது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் நேற்று மதியம் 2:16 மணிக்கு பிரவேசித்தனர்.
இந்த ராகு கேது பெயர்ச்சி விழா,மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நேற்று நட ந்தது. அதனையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு நட்சத்திர ராசி பரிகார ஹோமம், காலை10:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, அதைத்தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு, சிதம்பரம் குருக்கள் மூலம், சகல அபிேஷகம் நட ந்தது. மதியம் 2:16 மணிக்கு, மகா தீபராதனை காண்பிக்கப்பட்டு, அன்னதானம் நட ந்தது. ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்து, சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்திருந்தனர்.