பதிவு செய்த நாள்
19
மே
2012
10:05
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் உண்டியல் 18 வது முறையாக நேற்று திறக்கப்பட்டது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கோவில் வருமானத்தை பெருக்கவும், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவிலில் ஒன்பது இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் திறந்து எண்ணப்படுகிறது. நேற்று 18 வது முறையாக அறநிலையத் துறை உதவி ஆணையர் பரணிதரன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. நிர்வாக அதிகாரி சிவக்குமார், ஆய்வாளர்கள் வெங்கடேசன், ஜெயராமன், வாசு உடனிருந்தனர்.உண்டியலில் 8 லட்சத்து 50 ஆயிரத்து 562 ரூபாய் இருந்தது. மேலும், மலேசியா ரிங் 583, ஸ்ரீலங்கா ரூபாய்100, அமெரிக்க டாலர் 100, யு.ஏ.இ., திராம்ஸ் 35, யூரோ 5 என பல்வேறு நாடுகளின் ரூபாய்கள், தங்கம் 3.5 கிராம், 35 கிராம் வெள்ளி இருந்தது. ஐ.ஓ.பி., ஊழியர்கள் பணத்தை சரி பார்த்து வங்கிக்கு எடுத்துச்சென்றனர்.கோவில் அரசு கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு இதுவரை 87 லட்சத்து 95 ஆயிரத்து 674 ரூபாய் உண்டியல் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.