காரைக்கால்: திருநள்ளாரில் சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை தினந்தோறும் இரவு விநாயகர் ஊர்வலமும், 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை சுப்ரமணியர் வீதி உலாவும், 24ம் தேதி அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும் நடக்கிறது.25ம் தேதி இரவு 8.30 மணிக்கு செண்பக தியாகராஜ சுவாமிகள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுதல், 29ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. 30ம் தேதி இரவு செண்பக தியாராஜ சுவாமி தேரில் எழுந்தருளுதலும், 31ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது. 1ம் தேதி தங்க காக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி தெப்போற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.