திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2020 04:09
திருவொற்றியூர் : கொரோனா தடைகளுக்கு பின் திறக்கப்பட்ட திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நடை திறந்து, 1ம் தேதி முதல் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று வெள்ளி கிழமையை முன்னிட்டு, பாதுகாப்பாக மாஸ்க் அணிந்தபடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். சானிடைசன், வெப்பமானி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.