நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.நெல்லிக்குப்பம் வான்பாக்கம் சாலையில் உள்ள பழமையான செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. நேற்று காலை கலசத்தில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து அம்மனுக்கு கலசாபிஷேகம் செய்தனர். பூஜைகளை முருகன் குருக்கள் செய்தார். பூசாரி ராமு கரகத்தை சுமந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, அம்மனுக்கு பக்தர்கள் சாகைவார்த்து வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை கும்பம் படையல் நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.