பதிவு செய்த நாள்
07
செப்
2020
11:09
தியாகதுருகம்: கலையநல்லூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இதன் திருப்பணி வேலைகள் கடந்த 6 மாதத்திற்கு முன் துவங்கியது. கோவில் விமானம், அர்த்தமண்டபம், விநாயகர், முருகன், நவகிரக சன்னதி கலைநயத்தோடு கட்டப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
அதைத் தொடர்ந்து இன்று காலை 7:15 மணிக்கு கடம் புறப்பட்டது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, கோவில் தர்மகர்த்தா அய்யப்பா முன்னிலையில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி எலவனாசூர்கோட்டை பகவதி சுவாமிகள் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சமூக இடைவெளி யோடு பாதுகாப்புடன் விழாவில் பங்கேற்றனர். இன்ஜினியர் உதயகுமார், அ.தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் ராஜவேல், நகர செயலாளர் ஷியாம் சுந்தர், ஒப்பந்ததாரர் கொளஞ்சி, வக்கீல் சுபாஷ், பாலகிருஷ்ணன், குமரவேல், ஜெயச்சந்திரன், ரமேஷ், மணிவண்ணன், கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ்குமார், சிவா கலந்து கொண்டனர்.