வால்பாறை கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2020 12:09
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ராகு , கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணியசாமி கோவில் ராகு கேது பெயர்ச்சியொட்டி கோவிலில் யாகசாலை அமைத்து சிறப்பு வேள்வி நடந்தது . விநாயகருக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது . ராகு-கேது சாமிகளுக்கு சிறப்பு பூஜையுடன் தீபாராதனை நடந்தது. பூஜையில் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர் பரிகார ராசிக்காரர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதேபோல் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.