திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சித்திரை உற்ஸவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கொரோனா ஊரடங்கை அடுத்து சித்திரை, ஆடி, உற்ஸவம் நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்துசித்திரை, ஆடி உற்ஸவங்களை பக்தர்கள் இல்லாமல் தற்போது நடத்த கோயில் நிர்வாகத்தினர் முடிவெடுத்தனர். செப்.,8 ல் துவங்கி இரண்டு நாட்கள் பிராயச்சித்த ேஹாமம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை7:15 மணிக்கு சவுமியநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண மண்டபம் எழுந்தருளினார். பின்னர் கொடியேற்றத்திற்கான பூஜைகள் துவங்கின. காலை 9:50 மணிக்கு கொடியேற்றப்பட்டு, கொடிமரம் மற்றும் சுவாமிக்குசிறப்பு அபிேஷகமும் தீபாராதனையும் நடந்தது.தேவஸ்தான மரியாதை அளிக்கப்பட்டது. மாலையில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய சுவாமிக்கு அலங்காரத் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தென்னைமர வீதி பிரகாரம் வலம் வந்தார். பக்தர்கள் பங்கேற்பின்றி சித்திரை உற்ஸவம் நடைபெற்று வருகிறது.