சதுரகிரியில் செப். 15 முதல் நான்கு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2020 12:09
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு செப். 15 முதல் 18 மதியம் 1:00 மணி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோயில் செயல் அலுவலர் விஸ்வநாதன் அறிக்கை: உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவத்துறை, வனத்துறை, தீயணைப்பு துறையினர் இப்பணியில் ஈடுபடுவர். மழை பெய்தால் சூழ்நிலைக்கேற்ப அனுமதி மாற்றப்படும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.