சின்னமனுார் : குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயிலில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் மூலவர் சுரபி நதிக்கரையில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். பரிகாரம் செய்ய வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வாரத்தின் சனிக்கிழமைகளில் ஏராளமானோர் வருவர். அதன்படி கொரோனா தளர்வுக்கு பின் நேற்று சனீஸ்வரரை தரிசிக்க நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வெளியூர் பக்தர்களின் வாகனங்கள் தேனி ரோட்டில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.