முதுகுளத்துார் : முதுகுளத்துார் தாலுகா மரவெட்டி கிராமத்தில் பூவந்தி அய்யனார், செல்வ விநாயகர், கருப்பணசாமி கோயில், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வருஷாபிேஷக விழா, பால்குடம் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கிராம மக்கள் 10 நாட்களுக்கு முன்பு காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர்.காலை 6:00 மணிக்கு பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பால்குடம் எடுத்து பூவந்தி அய்யனார் கோயில் வந்தனர். பின்பு விநாயகர்,அய்யனாருக்கு பால் மற்றும் 21 வகையான அபிேஷகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. பொது அன்னதானம் வழங்கப்பட்டது.