திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஸ்ரீஜெயந்தி பிரம்மோற்சவத்தில் ராஜகோபாலன் கருடசேவையில் அருள் பாலித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், வேணுகோபாலனுக்கு ஸ்ரீ ஜெயந்தி பிரமோற்சவ விழா கடந்த 9ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு பாமா ருக்மணி சமேத ராஜகோபாலன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நாலாயிரபிரபந்தம், வேத பாராயணம், இரவு 7:30 மணிக்கு சாற்றுமுறை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கொரோனா விதிமுறையை பின்பற்றி, வீதி புறப்பாடு இன்றி, தனிமனித இடைவெளியுடன் கோவில் வளாகத்திலேயே விழா நடந்தது.