காரைக்கால்: திருநள்ளாறு நளன் குளத்தில் பக்தர்கள் குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் தங்கள் வேண்டுதலை இணையாக அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைக் விட்டு செல்கின்றனர்.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருகிறது. இதனால் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் திருநள்ளாறு வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் முன்னதாக நளம் குளத்தில் குளித்து விட்டு அவர்கள் அணிந்திருக்கும் உடைகளை குளத்தில் விட்டு செல்வது வழக்கம். பின் அருகில் உள்ள விநாயகரை தரிசனம் பின் சனிபகவானின் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கோவில் நிர்வாகம் கடந்த மார்ச் 13ஆம் தேதி பக்தர்கள் நலன் கருதி நளன் குளத்தில் குளிக்க அரசு தடை விதித்தது. இதனால் நளம் குளத்தில் உள்ள தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு இ.பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தினம் பகவானை தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் குளத்தில் உள்ள குறைந்த நீரை தலையில் தெளித்துக் கொண்டு பின்னர் அவர்கள் அணிந்திருந்த உடைகளை குளத்தில் விட்டு செல்கின்றனர். எனவே பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் குறைந்த தண்ணீரைக் கொண்டு புனிதநீர் தெளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் பலர் கூறுகின்றனர்.