வடலுார்; வடலுார் சத்திய ஞான சபையில் ஊடரங்கால் மாத பூஜை நடைபெறாத நிலையிலும், தினசரி பூஜையை காண பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.
வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக மாதாந்திர பூஜை நடைபெறவில்லை. தினசரி பூஜைகள் மட்டுமே நடந்தது. ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஆவணி மாத பூசம் நட்சத்திரமான நேற்று மாத பூஜை நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாத பூஜை நடைபெறாது எனவும், வழக்கமான தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன. நேற்று பகல் 11:30 மணிக்கு நடந்த பூஜையில் சபை மண்டப வளாகம் முன்பு வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.