Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: நன்மை அதிகரிக்கும் மிதுனம்: கையில் பணப்புழக்கம் மிதுனம்: கையில் பணப்புழக்கம்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
ரிஷபம்: சுக்கிரனால் நன்மை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம்: சுக்கிரனால் நன்மை

பதிவு செய்த நாள்

16 செப்
2020
08:09

சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பார். புதன் செப். 21ல் இருந்து அக். 7 வரை நன்மை தருவார். இந்த காலத்தில்  எடுத்த முயற்சி வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் பொருளாதார வளம் மேம்படும். பண வரவு இருக்கும். இருப்பினும் செலவை குறைத்து சிக்கனமாக இருக்க வேண்டும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்.28க்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.

பெண்கள் வாழ்வில் குதுாகலம் அதிகரிக்கும். உற்சாகமாகமுடன் பணியில் ஈடுபடுவர்.  தோழிகள் உதவிகரமாக இருப்பர். செப். 21க்கு பிறகு  நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர்.
உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம்.

சிறப்பான பலன்கள்
* அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடையிருக்காது.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் செப். 21க்கு பிறகு முன்னேற்றம் காண்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.
*  ஐ.டி., துறையினர் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* வக்கீல்கள் செப். 21ல் இருந்து அக்.7 வரை நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* பொதுநல சேவகர்களுக்கு வர வேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும்.
* கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சககலைஞர்கள் உதவிகரமாக இருப்பர்.
* விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். செப்.21க்கு பிறகு பாசிப்பயிறு, எள், சோளம் பயிரிடவும். கால்நடை செல்வம் பெருகும்.  பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
* மாணவர்கள் செப்.21க்கு பிறகு கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையும்.

சுமாரான பலன்கள்
* மருத்துவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். சிரத்தை எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும்.
* வக்கீல்கள் அக்.7க்கு பிறகு புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது சற்று கவனம் தேவை.
* ஆசிரியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும்.
* அரசு பணியாளர்கள் அக்.7க்கு பிறகு வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். சிலர் இடமாற்றத்தை காணலாம்.
* தொழிலதிபர்களுக்கு கடந்த மாதம் பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறைந்தாலும், பகைவர் தொல்லை வரலாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
* வியாபாரிகளுக்கு புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். கூட்டாளிகள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். பொருட்களை களவு கொடுக்க நேரிடும்.
* தரகு, கமிஷன் தொழில் புரிவோருக்கு பண விரயம் ஆகலாம். முயற்சிகளில் தடைகள் வரலாம்.
* அரசியல்வாதிகளுக்கு .பண விஷயத்தில் கவனம் தேவை. அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்கவும்.
* விவசாயிகளுக்கு சொத்துகள் வாங்கும் எண்ணம் தாமதமாகும். வழக்கு, விவகாரங்கள் பாதகமாகவே அமைய வாய்ப்புண்டு. அக்.7க்கு பிறகு கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது.
* மாணவர்கள் அக். 7க்கு பிறகு மெத்தனமாக இருக்க வேண்டாம் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும்.
   நல்ல நாள்: செப். 20,21,22,2329,30, அக்.1,2,6,7,11,12.
  கவன நாள்: செப்டம்பர் 24,25 சந்திராஷ்டமம்
  அதிர்ஷ்ட எண்:4,6. நிறம்: வெள்ளை , பச்சை.

பரிகாரம்:
* செவ்வாயன்று ஏழைகளுக்கு துவரை தானம்
* தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
* சனிக்கிழமையில் அனுமனுக்கு துளசி மாலை

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar