நிலக்கோட்டை : அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் முன்னோர்களை வழிபட்டு நெய் தீபம் ஏற்றினர்.அரசு உத்தரவால் கோயில் வளாகத்திற்கு பதிலாக, ஆற்றங்கரை பகுதிகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட வைகை நீரில் புனித நீராடினர்.ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பில் தாமரைப்பூ, வடைமாலை சூட்டி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தார். நிலக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.