பதிவு செய்த நாள்
18
செப்
2020
04:09
தர்மபுரி: புரட்டாசி மாத பிறப்பை யொட்டி, தர்மபுரியில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.
புரட்டாசி மாதம், பெரு மாளுக்கு உகந்த மாதமாக கருதப் படுகிறது. மக்கள் இம்மாதம் முழுவதும், அசைவ உணவை சேர்க்காமல், சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது வழக்கம். புரட்டாசி மாத பிறப்பான நேற்று, தர்மபுரியில் உள்ள பல் வேறு பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. இதில், தர்மபுரி கடைவீதி பிர சன்ன வெங்கட்ரமண சுவாமி கோவி லில், நேற்று காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கால், மிக குறைவான அளவிலேயே பக்தர்கள் கோவில் பூஜையில் கலந்து கொண்டனர். இதேபோல், கோட்டை பரவாசுதேவர் கோவில், இலக்கியம்பட்டி நித்யகல்யாண சுவாமி கோவில் உள்பட, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் நேற்று, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங் காரம் நடந்தது.
வெள்ளி கவச அலங்காரம்: வேலூரில் உள்ள திருமலை - திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில், புரட்டாசி மாத பிறப்பையொட்டி, வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக்கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.