வால்பாறை:வால்பாறையில் ஸ்ரீ சத்யசாய் சமிதியில் புரட்டாசி சிறப்பு வழிபாடு நடந்தது.வால்பாறை நகர் கக்கன் காலனியில் ஸ்ரீசத்யசாய் சமிதியில் தினமும், காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. புரட்டாசி துவக்க நாளான நேற்று முன் தினம் மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கன்வீனர் சண்முகவேல், ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி உட்பட பலர் செய்திருந்தனர்.