பதிவு செய்த நாள்
20
செப்
2020
12:09
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று, ஆன்லைனில் பதிவு செய்த, 3,600 பேர், சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து, சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசிக்க, திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் கூடுவர்.தற்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், கோவில் நிர்வாகம் சார்பில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து, தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை, 6:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, தரிசன நேரத்தை ஆறு பிரிவுகளாக பிரித்து, பிரிவுக்கு, 600 பேரை மட்டும் அனுமதித்தனர். 250 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு, 200 டிக்கெட்டு, 50 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு, 200 டிக்கெட்டு, கட்டணமில்லாத தரிசனத்திற்கு, 200 டிக்கெட்டு என ஒதுக்கப்பட்டன.முதல் சனிக்கிழமையான நேற்று, ஆன்லைனில் பதிவு செய்த, 3,600 பேர் மட்டும், சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.