பதிவு செய்த நாள்
20
செப்
2020
12:09
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமை விழா, வெகு விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் விரதமிருந்து கொண்டு வரும் அரிசி, பருப்பு, காய்கறிகளை, கோவிலில் உள்ள தாசர்களுக்கு வழங்கி, அதிலிருந்து சிறிது பெற்று சென்று, பொங்கலிட்டு விரதத்தை முடிப்பர்.புரட்டாசி சனிக்கிழமையான, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளே, வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சமூக இடைவெளியுடன், பக்தர்கள் தரிசனத்திற்கு கோவில் நிர்வாகத்தினர் அனுமதித்தனர். வருவாய்த்துறையின் வேண்டுகோளை ஏற்று, காரமடையில் தேர் செல்லும் நான்கு வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.